Skip to main content

Posts

Featured

‘ அகாலம் ’ தொகுப்பிலுள்ள  இரு கவிதைகள் குறித்து   வான்மதி   செந்தில்வாணன்                    கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின்   “ அகாலம் ”  எனும் கவிதைத் தொகுப்பை  இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான   “ வயலின் மனிதன் ”  ஐ சட்டென கடக்க இயலவில்லை .’’ வயலின் மனிதன் ‘  தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன .  இரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள் .  இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியது .  மட்டுமன்றி கவிதை வாசித்தல் ,  இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்தது .  அத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது . வயலின் மனிதன் வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட இசை என்னைச் சுருட்டி எறிகிறது பூமிக்கு வெளியே குரல்களின் அடுக்குகளுக்...

Latest Posts